Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய பெண்

0 129

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான யு டியூப், வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது.இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் வடக்கு கலிஃபோர்னியாவில் சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த நசீம் அஃதாம் என்ற பெண் யூ டியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். பின் அந்த பெண் தன்னையே துப்பாக்கியால் சுட்டு மரணம் அடைந்து இருக்கிறார்.நேற்று மாலை கலிபோர்னியாவில் இருக்கும் யூ டியூப் நிறுவன தலைமையகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த இவர் சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

யூ டியூப் வீடியோக்கள் மூலம் வரும் வருமானம் குறைந்ததால் அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டார் என்று சொல்லப்படுகிறது.மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் நசீமின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த துப்பாக்கி சூடு இதன் காரணமாக நடந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் ”இன்று நடந்து இருக்கும் மோசமான சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. யூ டியூப் சிஇஓ சூசனும் நானும் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும், யூ டியூப் நிறுவனத்திற்கும் இந்த மோசமான நேரத்தில் உறுதுணையாக இருப்போம். உதவியாக இருந்த போலீஸ் உட்பட அனைவருக்கும் நன்றி” என்றுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.அங்கு பள்ளிகள், பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த நிலையில் யு டியூப் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்வு பலரை கேள்வி எழுப்ப செய்திருக்கிறது.இந்த சம்பவம் காரணமாக அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான குரல் வலுத்து இருக்கிறது. டிவிட்டர் நிறுவனர் தொடங்கி எல்லோரும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site