Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல; அவர் ஓய்வு பெறும் நேரம்: காங்கிரஸ்

0 64

பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல என்றும் அவர் ஓய்வு பெறும் நேரமிது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. #PMModi

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் 2வது பட்ஜெட் கூட்டத்தொடரின்பொழுது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் நாடாளுமன்றத்தின் 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கிறார்.

இதுபற்றி பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ஜனநாயகமற்ற முறையிலான காங்கிரசின் நடவடிக்கை மற்றும் பிரிவினை அரசியலை தொடருதல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான செயல் திட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் தனது அலுவலக பணிகளுடன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அவருடன் கட்சி எம்.பி.க்களும் உண்ணாவிரதம் மேற்கொள்வதுடன் நாடு முழுவதும் தர்ணா போராட்டங்களிலும் ஈடுபடுவர் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மத்திய மந்திரிகள் மற்றும் அக்கட்சியின் தலைவர்களும் நாடு முழுவதும் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி, உண்ணாவிரதம் மேற்கொள்வது புகைப்பட சந்தர்ப்பத்திற்காகவும் மற்றும் இது ஒரு நாடகம் என கூறியுள்ளது. பிரதமர் மோடி உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கான நேரமல்ல. இது அவர் ஓய்வு பெறுவதற்கான நேரம். இப்பொழுது இல்லை எனில் 2019ம் ஆண்டில் அவர்கள் ஓய்வு பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site