Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவு

0 60

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை கொல்கத்தா ஐகோர்ட்டு ஏப்ரல் 16-ம் தேதி வரையில் சஸ்பெண்ட் செய்து உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் மூன்றாம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியுடன் வேட்புமனு தாக்குதலுக்கான கால அவகாசம் முடிகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்தன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் பிற கட்சிகளை வேட்புமனுவை தாக்கல் செய்ய விடவில்லை என இடதுசாரிகள், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே 10-ம் தேதி வரையில் தேர்தல் ஆணையம் வேட்பு மனு தாக்கல் தேதியை நீட்டித்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்தது. இவ்விவகாரத்திற்கு எதிராக பா.ஜனதா சுப்ரீம் கோர்ட்டு சென்றது. பின்னர் விசாரணை ஐகோர்ட்டிற்கு வந்தது.

விசாரணையை மேற்கொண்ட ஐகோர்ட்டு, பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளர்கள் வேட்புமனுவை ஆய்வு செய்தல், ஏற்றல் மற்றும் தள்ளுபடி செய்துவது தொடர்பான எந்தஒரு பணியையும் ஏப்ரல் 16-ம் தேதி வரையில் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது. கொல்கத்தா ஐகோர்ட்டில் பாரதீய ஜனதா தாக்கல் செய்த மனுவில், திரிணாமுல் காங்கிரஸ் பிற கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்வதை வன்முறையின் மூலம் தடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site