Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்!

0 58

இருபத்தோராவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 48 கிலோகிராம் பளு தூக்கும் பெண்கள் பிரிவில் தினுஷா மற்றும் 56 கிலோகிறாம் பளு தூக்கும் ஆண்கள் பிரிவில் சத்துரங்க லக்மால் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.

21வது பொதுநலவாய விளையாட்டு போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்ட் நகரில் இடம்பெற்றது. இந்த விளையாட்டு விழாவின் முதல் தினத்திற்குரிய விளையாட்டுப் போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதில் பட்மின்ட்டன், ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகளில் இலங்கை போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

விழாவின் ஆரம்பத்தில் அடை மழை பெய்தாலும், அது விளையாட்டின் உயிரோட்டத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் என்பதுடன் இதில் 71 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 4500ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். இவர்கள் 275 தங்கப்பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site