Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

பாலியல் பலாத்கார பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்

0 7

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில போலீஸ் தயக்கம் காட்டி வருகிறது. #UnnaoCase

லக்னோ,

உன்னாவ் மாவட்டம் பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய உதவியாளர்கள் தன்னை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர், எனக்கு நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமி போராடி வருகிறார். இதற்கிடையே அவருடைய தந்தையும் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரிக்க அமைக்கப்பட்டு உள்ளது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இருப்பினும் அவருக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க போலீஸ் தயக்கம் காட்டுகிறது. வழக்கு விசாரணை சிபிஐ வசம் செல்ல உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி பல்வேறு நிலைகளில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை விவரித்து வருகிறார். இப்போது கண்ணீர்மல்க பேட்டியளித்து உள்ள அவர் தன்னுடைய உறவினர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். “என் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. என்னுடைய தந்தை கொல்லப்பட்ட பின்னரும் அது தொடர்கிறது. எப்படி நான் நீதியை பெற முடியும்? சிபிஐ விசாரணை என்பது சரியானதாக இருக்கும், ஆனால் எம்.எல்.ஏ.வை முதலில் கைது செய்ய வேண்டும், அவர் விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தலாம். இப்போது என்னுடைய சித்தப்பாவின் உயிர் பற்றியும் எனக்கு அச்சம் எழுந்து உள்ளது,” என கூறிஉள்ளார்.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site