Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

உங்களால் முடியுமா ? இப்படியும் ஒரு விசித்திர மனிதரா ???

0 30

பாரஸ்ட் கம்ப் எனும் திரைப்படம் 1994-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகன் கம்ப், இவர் தன்னுடைய சிறு வயது காதலி ஜென்னியைத் தேடி ஓடுவார். சுமார் 15,248 மைல் தூரம் ஓடுவதாக இத்திரைப்படம் அமைந்திருக்கும்.

இப்படத்திற்கு அடிமையான இங்கிலாந்தைச் சேர்ந்த 39 வயதுள்ள ராப் போப் என்பவர், ஃபாரஸ்ட் கம்பின் இந்த சாதனையை நிஜ வாழ்க்கையில் முறியடிக்க வேண்டும் என்பதற்காக ஓட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

பொதுவாக இதுபோன்ற நீண்டகால ஓட்டத்திற்க்கு பல மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் இத்திரைப்படத்தில் வரும் கம்ப் போலவே எவ்விதப் பயிற்சியும் இன்றி, அமெரிக்காவில் திடீரென்று சாதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளார் ராப்.

இவர் தினமும் 40 மைல் தூரம் சுட்டெரிக்கும் வெயில், தாங்க முடியாத குளிர், கொட்டித் தீர்க்கும் மழை என்று எந்தப் பருவநிலையையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து ராப் போப், பயிற்சி எடுக்காமல் ஓடுவதால் பலமுறை காயம், மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. தனிமை வாட்டியிருக்கிறது. ஆனாலும் தன் சாதனை ஓட்டத் திட்டத்திலிருந்து நான் பின்வாங்கவில்லை.

ஏனெனில் ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்ததில் இருந்து கம்பின் சாதனையை நிஜத்தில் முறியடிக்க வேண்டும் என்று தோன்றியது.

அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நாமும் கம்ப்பாக மாற மாட்டோமா என்று ஏங்குவோம். அதன் பாதிப்பால் தான் நான் ஓடுவதற்கு முடிவெடுத்தேன்.

ஆனால் திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆரம்பித்த போது அவ்வளவு எளிதாக இல்லை. 4 கட்டங்களாகப் பிரித்துக்கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன்.

பருவநிலை மாற்றம் என் ஓட்டத்தை மிகவும் கடினமானதாக மாற்றியது. என் தாடியில் கூட பனி படர்ந்தபடி ஓடியிருக்கிறேன்.

என் பயணத்தை ஆவணப்படுத்தும் விதத்தில் ஓட்டத்தின் நடுவே நான் கடக்கும் முக்கியமான இடங்களை படம் எடுத்து சமூக வலைதளங்களில் என் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன்.

கம்ப்பின் சாதனையை முறியடித்து, 409 நாட்களில் 15,600 மைல்களைக் கடந்து விட்டேன். என்னுடைய இலக்கை அடைய இன்னும் 200 மைல்கள் தான் ஓட வேண்டும்.

ஆனால் எனக்கு மகள் பிறந்திருப்பதால் நான் இங்கிலாந்துக்குத் திரும்பி விட்டேன். ஏப்ரல் மாதம் என் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site