Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

சிறுமி பலாத்காரம் -இறந்து போன மனிதம் “மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்”

0 145
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் மனிதர்களாக தோற்றுவிட்டோம் என மத்திய மந்திரி கூறிஉள்ளார். #JusticeForAsifa

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு, மயக்கமருந்து கொடுத்து, சிறை வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டங்களும் நடக்கிறது. இந்நிலையில் கத்துவா கொடூரச் சம்பவம் தொடர்பாக முதலாவது மந்திரியாக மத்திய இணை மந்திரி விகே சிங் கருத்தை பதிவு செய்து உள்ளார்.

“ஆசிபா விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது,” என மத்திய மந்திரி விகே சிங் கூறிஉள்ளார்.

சிறுமி ஆசிபா படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பா.ஜனதா மந்திரிகள் கலந்துக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜனதாவினர் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. சிறுமி படுகொலை விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்கள் குற்றமற்றவர்கள் பா.ஜனதா ஆதரவு பெற்ற இந்து ஏக்தா மன்ச் என்னும் அமைப்பு போராட்டங்கள் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிறர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரி இவ்விவகாரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site