Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா!

0 103

உலகம் படிப்படியாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அதில் முக்கிய பங்கு வகிப்பது மின்சாரத்தைச் சேமித்துவைக்கும் வெற்றிகள்தான் (Battery) . ஆனால், அவற்றின் சார்ச்சிங் நேரம் அதிகம் என்பது அதிலிருக்கும் முக்கியமான குறைபாடுகளில் ஒன்று.

ஒரு வெற்றி அதனுள்ளே ஆற்றலைச் சேமிக்க எடுத்துக்கொள்ளும் காலம்தான் சார்ச்சிங் நேரம். எடுத்துக்காட்டாக மொபைலில் இருக்கும் சிறிய அளவிலான வெற்றியில் முழுவதுமாக சார்ச் ஏறுவதற்கே சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மொபைலை சார்ஜரில் இணைத்துவிட்டுப் பயன்படுத்த நினைத்தாலும் சார்ஜிங் போர்ட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் சார்ச்சரில் கனெக்ட் செய்த சில நிமிடங்களிலேயே Battery fully charged என்ற செய்தி ஸ்க்ரீனில் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட அதைப்போல ஒரு தொழில்நுட்பத்தைத்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் தென் கொரியாவில் ஒரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

முப்பதே விநாடிக்குள் முழுமையான சார்ச்சிங் மின்சாரம் தேவைப்படும், வெற்றியைப் பயன்படுத்தும் சாதனங்கள் பெரும்பாலானவற்றில் லித்தியம் அயான் வெற்றிகளே பயன்பாட்டில் இருக்கின்றன. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் வெற்றிகள் செயல்திறனில் கில்லியாக இருந்தாலும் சார்ச்சிங் ரைம் விடயத்தில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கின்றன.

எல்லாவகைகளிலும் சிறப்பானதாகச் செயல்படக்கூடிய வெற்றிகளை கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தென் கொரியாவைச் சேர்ந்த கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ஜெங் கு காங் (Jeung Ku Kang) மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

“பேராசிரியர் ஜெங் ஹோ காங்” “பேராசிரியர் ஜெங் ஹோ காங்” width=”600″ இதன் மூலமாக ஒரு வெற்றியை 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் முழுமையாக சார்ச் செய்ய முடியும். வெற்றிகளில் நேர்மின்முனை (anode) மற்றும் எதிர்மின்முனை (cathode) என்ற இரண்டு பகுதிகள்தான் மிக முக்கியமானவை. இவைதான் செயல்திறனை முடிவு செய்கின்றன. இந்த வெற்றியின் நேர்மின்முனை கிராபீனைப் (graphene) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராபீன் பாலிமர் இழைகளால் வலுவூட்டப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மின்முனை நிக்கல் ஆக்சைடால் உருவாக்கப்பட்டுள்ளது. நிக்கல் எதிர்முனையில் கிராபீன்கள் நானோ துகள்களாக மாற்றப்பட்டு அதில் இணைக்கப்பட்டுள்ளன.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site