Lanka BBC
The Lanka Brave Broadcasting Corporation

மாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா?

0 21

உதிரப்போக்கும் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் 4 – 12 டீஸ்பூன் வரை அளவிலான இரத்தம் கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.j

மாதவிடாயின் போது சில பெண்களுக்கு வெளியாகும் ரத்தப்போக்கின் நிறம் மாறுபடலாம். பளிச்சென்ற சிவப்பு நிற உதிரப்போக்கு மட்டுமே உங்கள் ஆரோக்கியத்தை குறிக்கிறது.

இந்த மாதிரியான இரத்தம் உடனே கருப்பையில் சேகரிக்கப்பட்டு உடனே வெளியேறுவதை குறிக்கிறது

இதே நேரத்தில் ஒரு சிலருக்கு பழுப்பு நிறத்தில் (Brown) உதிரப்போக்கு ஏற்பட்டால் அது நோய்களுக்கான அறிகுறியாகும்.

சில நேரங்களில் நீங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது உங்கள் ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டு பழுப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறவும் வாய்ப்புள்ளது.

கருச்சிதைவின் போதும் இந்த பழுப்பு நிற உதிரப்போக்கு உண்டாகலாம். பழுப்பு நிறத்தில் இரத்தம் கட்டி கட்டியாக திசுக்களுடன் வெளியேறினால் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதை குறிக்கலாம். உடனே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

சில சமயங்களில் கருப்பை நார்த் திசுக் கட்டிகள் (புற்று நோய் கட்டிகள் அல்ல) தோன்றி இருக்கலாம். இதனாலும் பழுப்பு நிறம் மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். எனவே இந்த அசாதாரண இரத்தப் போக்கின் அறிகுறிகளை கவனித்து வருவது நல்லது.

மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் சமநிலையின்மையால் கருப்பையின் உள்ளடுக்குகள் தடினமாகி அதிக இரத்த போக்கு ஏற்படும்.

இதனாலும் இரத்தம் கட்டி கட்டியாக வெளியேறும். தீடீர் மாற்றம், எடை பருமன், மருந்து பக்க விளைவுகள், கருப்பை விரிவாக்கம், கருப்பையில் இரத்த அடைப்பு, கருப்பை திசுக்களின் அசாதாரண வளர்ச்சி, முறையற்ற மாதவிடாய் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது.

Loading...
How to whitelist website on AdBlocker?

How to whitelist website on AdBlocker?

  1. Click on the AdBlock Plus icon on the top right corner of your browser
  2. Click on "Enabled on this site" from the AdBlock Plus option
  3. Refresh the page and start browsing the site